64 வயதில் 2 ஆவது மனைவியை விவாகரத்து!! -நடிகர் முகேஷ் அதிரடி முடிவு-
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் தற்போது முறிவு ஏற்பட்டு உள்ளது. விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பல் தேவிகா கூறும்போது, “முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது.
எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என்றார்.