வடகிழக்கு மக்களுக்கான 16 லட்சம் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸிடம் ஒப்படைத்தார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மக்களுக்கான 16 லட்சம் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸிடம் ஒப்படைத்தார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..

வடகிழக்கு மாகாண மக்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் 16 லட்சம் கொவிட் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றிருக்கின்றார். 

ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 

தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்தத் தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் 

அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில், 

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு