திருமணமாகி 10 மாதங்களேயான நிலையில் கணவன், மனைவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
திருமணமாகி 10 மாதங்களேயான நிலையில் இளம் தம்பதிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் ரஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி (27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியர் நேற்று மாலை 7 மணியளவில் கிணற்றில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அவர்கள் தற்கொலை நோக்கில்
கிணற்றில் பாய்ந்தார்களா அல்லது ஏதேனும் குற்றச்செயல்களா என்பது இதுவரை உறுதியாகவில்லை எனக் கூறப்படுகின்றது.
திருமணத்துக்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
மேலும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.