A-9 வீதி ஊடாக பயணிப்போருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை! நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை சுகாதார பிரிவு சிறப்பு நடவடிக்கை..
A-9 வீதி ஊடாக பயணிப்போருக்கு நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணிவரை பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படுகின்றது.
மூன்று முறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் A-9 வீதியூடாக பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினை அடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம் ,
அலுலக தேவை போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர்
மற்றும் வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.