பீ.சி.ஆர் பரிசோதனை வேண்டாம், முடக்கத்தை விலக்கு! 53 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் போராட்டம், மண்டையை சொறியும் சுகாதார பிரிவு..
முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் கொரோனா அபாணம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசத்தை விடுவிக்ககோரி வெளிமாவட்ட மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
குறித்த பகுதியில் யூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அப்பகுதியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசம் சுகாதார பிரிவினால் முடக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி நேற்று போராட்டத்தில் குதித்துள்ள மக்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த பதிவும் இல்லாத மக்களால்
சுகாதார பிரிவினருக்கு பணிசெய்வதில் பாரியசவால்கள் இவர்கள் தொடர்பிலான கண்காணிப்போ அல்லது பதிவு நடவடிக்கையோ எவரிடமும் இல்லை இன்னிலையில் தான் (22.07.21)அன்று இந்த பகுதியில் இருந்து
கொரோனா தொற்றாளர் ஒருவர் இரண்டு மாகாணங்களை கடந்து புத்தளத்திற்கு சென்றிருந்தமை குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் மக்களால்
கொரோனாக் கொத்தணி உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காவலரண் அமைத்து வீதிசோதனை செய்து மக்களை விடாப்பிடியாக
கட்டுபபடுத்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வசிக்கும் நாயாற்று பகுதிதொடர்பில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார் இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனகடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் மூந்நூறு படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் அரச திணைக்களம் எவற்றிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பேர் இவ்வாறு இங்கு வாழ்கின்றார்கள் என்று யாரிடமும் தெரியாத நிலை அரசாங்கத்தின பண உதவியினை பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள்.
நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் பதிவினை முனனெடுத்தபோது 845 போர் பதிவினைமேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு பதிவினை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் அன்டியன்,
பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதாரபிரிவினர் பரிந்துரை செய்த போது இல்லை 400 பேர்வரையில்தான் என்று புத்தளம் மீனவர்கள் சொல்கின்றார்கள்.
இவ்வாறு எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியில் இருந்து 379 பேர்வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.21 வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.
இன்னிலையில் முடக்கப்பட்ட ஒரு பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வத்காக 24.07.21 அன்று சுகாதார பிரிவினர் சென்றபோது முடக்கப்பட்ட பகுதியில் இருந்த புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டில் எத்தனையோ மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிக்கும் இந்த வேளையில் இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்காமையானது கவலையளிக்கின்றது.
கடற்தொழில் அமைச்சு, நீரியல்வளத்திணைக்களத்தின் எந்தஅனுமதியும் இல்லாத நிலையில் இவாகளின் கடற்தொழில் நடவடிக்கையினையும் இவர்களின் தொழில் நடவடிக்கையினையும் யார் கண்காணிப்பார்கள்
இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய ஆபத்து எதிர்காலத்தில் உள்ளது அரச பாதுகாப்பு இயந்திரங்கள் இதனை கருத்தில்கொண்டு சட்டம்அனைவருக்கும்
சமம் என்பதை இங்கும் நிறைவேற்ற வேண்டும் என்பது முல்லைத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.