SuperTopAds

பூநகரி பிரதேச வைத்தியசாலை மருத்துவ அதிகாரியின் வாகனம் விபத்தில் சிக்கியது...

ஆசிரியர் - Editor I
பூநகரி பிரதேச வைத்தியசாலை மருத்துவ அதிகாரியின் வாகனம் விபத்தில் சிக்கியது...

பூநகரி பிரதேச வைத்தியசாலை மருத்துவ அதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளானதில் மருத்துவ அதிகாரியின் தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசா லையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது கிளிநொச்சி - பூநகரி வீதியில் குடம் உருட்டி பாலத்திற்கருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து சம்பவத்தில் பூநகரி பிரதேச வைத்தியசாலை மருத்துவ அதிகாரியின் சகோ தரன் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். எனினும் மருத்துவ அதிகாரியின் தயார் பலத்த காயமடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு, 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.