தளபதி விஜய்யின் வழக்கு!! -விசாரணைக்கு பட்டியலிட மேல் நீதிமன்றம் உத்தரவு-

ஆசிரியர் - Editor II
தளபதி விஜய்யின் வழக்கு!! -விசாரணைக்கு பட்டியலிட மேல் நீதிமன்றம் உத்தரவு-

தளபதி இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில் இந்த வழக்கு, வரி தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை செய்யும் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு