இலங்கை வங்கி கிளையில் 6 பேருக்கு கொரோனா தொற்று! மேலும் ஒருவருக்கு மீள் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
இலங்கை வங்கி கிளையில் 6 பேருக்கு கொரோனா தொற்று! மேலும் ஒருவருக்கு மீள் பரிசோதனை..

கிளிநொச்சி - பளை இலங்கை வங்கி கிளையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த 16 பேருக்கு நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.  

இதன்போது 6 பேர் தொற்றாளர்களாக அடையளாம் காணப்பட்ட அதேவேளை ஒருவருக்கு மீள் பரிசோதனை செய்யப்படவேண்டியுள்ளதாக 

மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை,தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்,

இலங்கை வங்கியின் பளைக் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் நால்வரும் அங்கு பயிற்சியாளர்களாக பணியாற்றும் இருவருக்கும் 

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Radio