SuperTopAds

நாட்டில் டெல்ட்டா திரிபு வைரஸ் பரவல் தீவிரமாகிறது! நாட்டை திறப்பது ஆபத்தானது, என எச்சரிக்கிறது இலங்கை வைத்திய சங்கம்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் டெல்ட்டா திரிபு வைரஸ் பரவல் தீவிரமாகிறது! நாட்டை திறப்பது ஆபத்தானது, என எச்சரிக்கிறது இலங்கை வைத்திய சங்கம்..

டெல்ட்டா வை திரிபு வைரஸ் நாட்டில் வேகமாக பரவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன, நாடு 100 வீதம் வழமைக்கு திரும்பினால் 2 மாதங்களுக்குள் நாடு பேரழிவை சந்திக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொழும்பு நகர எல்லைக்குள் 30 வீதமானோருக்கு டெல்டா பிறழ்வு தொற்று ஏற்பட்டுள்ளது. ஏனைய வைரஸ்களை விட டெல்டா பிறழ்வு விரைவாக பரவும் தன்மையுடையது.

இந்நிலையில் நாடு 100 வீதம் திறக்கப்பட்டு வழமைபோன்று செயற்பட்டால், டெல்டா பிறழ்வு மிக வேகமாக ஒரு மாதத்துக்குள் அல்லது இரண்டு மாதங்களுக்குள் இது வேகமாகப் பரவலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,நமது நாட்டில் தற்போது வயதானோர் எண்ணிக்கை தற்போது 15 வீதமாக உள்ளது. அவர்களில் 08 வீதமானோருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

அதன் மூலம் எமது நாட்டில் பெரும்பாலானோர் தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. இதனால் தடுப்பூசியினால் கிடைக்கக்கூடிய பாதுகாப்புக் குறித்து திருப்தியடைய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.