அடுத்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்ல...VIDEO
2 வருடங்கள் மட்டுமே வடமாகாண முதலமைச்சராக இருப்பேன் எனவும், பின்னர் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம். இனியும் அவரை கஸ்டப்படுத்த கூடாது. ஆகவே அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார். என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது குறித்து இன்று ஊடகவியலாளர்கள் கேட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை 2013ம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக அழைத்தபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு முதலமைச்சர் ஒரு நிபந்தனையை விதித்திருந்தார்.
அந்த நிபந்தனை என்னவென்றால் தான் 2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன். அதன் பின்னர் தம்பி மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும். என்பதே அந்த நிபந்தனை பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பேசியபோது 2 வருடங்கள் என கூறுவது பொருத்தமற்றது. என கூறியிருந்தார்.
இதற்கு நான் மட்டுமல்ல பலர் சாட்சியாக இருக்கிறார்கள். அவ்வாறு 2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்துவிட்டோம்.
அவரை இனியும் கஸ்டப்படுத்த கூடாது. ஆகவேதான் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஷ்வரன் நிறுத்தப்படமாட்டார் என நான் கூறினேன். நான் கூறியது உண்மையே என சுமந்திரன் கூறியுள்ளார்.