விடுதலை புலிகள் மீதான அச்சம் நாட்டில் இப்போதும் உள்ளது! வடகிழக்கு இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை..
இலங்கையில் விடுதலை புலிகள் மீதான அச்சம் இன்னும் நீங்கவில்லை. என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் புலத்திலுள்ள
சில முன்னாள் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு இலங்கையிலிருந்தும் சிலர் துணைபோகிறார்கள்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் சிலர் நாட்டின் சட்டதிட்டங்களை அறியாமல் தாம் நினைத்ததுபோல் செயற்படுகின்றனர்.
அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துவருகின்றோம்.
விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சிகளுக்கு துணைபோகிறவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்கப்படும்.
நாட்டில் இன்னுமொரு இரத்த ஆறு வேண்டாம். வடகிழக்கு இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமானதாகும்.
உங்களுடைய இளமைக்காலம் பொன்னானது. அதை சுதந்திரமாக கழியுங்கள். அதை விடுத்து பயங்கரவாத செயல்களுக்கு துணைபோய்
சிறைகளில் உங்கள் இளமைக்காலத்தை கழிக்கவேண்டாம் என்றார்.