அரச காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்.புன்னாலைக்கட்டுவன் மக்கள் ஆர்ப்பாட்டம்
அரச காணி அபகரிப்புக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அச்செழுப் பகுதியில் அமைந்துள்ள புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார்- 210 பரப்புக் காணி அபகரிக்கப்பட்டு வெளிநபர் ஒருவருக்கு வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவரால் விற்கப்பட்ட காணியை மீளவும் மீட்டுத் தருமாறு வலியுறுத்தியே மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.