திங்கட்கிழமை கூடுகிறது கூட்டமைப்பு! - நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு.

ஆசிரியர் - Admin
திங்கட்கிழமை கூடுகிறது கூட்டமைப்பு! - நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் கூடவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் திங்கட்கிழமை காலை கொழும்பில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றத்தை செய்த ஸ்ரீலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அணியினர் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 20ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது பற்றிய முடிவினை எடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை காலை கூடவுள்ளது.

Radio