வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவையை Huawei விஸ்தரிப்பு

ஆசிரியர் - Admin
வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவையை Huawei விஸ்தரிப்பு

நாடளாவியரீதியில் சேவை மையங்கள் மற்றும் சேகரிப்பு மையங்களை விஸ்தரித்து வருகின்றது இலங்கையில் வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்கள் மத்தியில் முதலாவது ஸ்தானத்தில் உள்ள Huawei ஆனது Huawei சேவை மையங்கள் மற்றும் சேகரிப்பு மையங்களை விஸ்தரிப்பதன் ஊடாக வாடிக்கையாளர் மீதான தனது கவனத்தை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது. 

இன்று வரையில் கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இலங்கையின் பாரிய நகரங்களை உள்ளடக்கி, ஏழு சேவை மையங்களை Huawei இயக்கி வருகின்றது. 

ஸ்மார்ட்போன் மற்றும் tablet திருத்த வேலைகள், பேணல் மற்றும் உத்தரவாதத்திற்கு கீழ்ப்பட்ட சேவைகள் போன்ற சேவைகளை வழங்கும் வகையில் Huawei சேவை மையங்கள் இயங்கி வருவதுடன், புத்தாண்டு பருவகாலத்தில் Huawei வர்த்தகநாம துணைச் சாதனங்களை கொள்வனவு செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு இடமளித்துள்ளன. 

Huawei தலைமை அலுவலகத்தில் விசேட பயிற்சிகளைப் பெற்று, திறமையும், தகைமையும் கொண்ட பணியாளர்களிடமிருந்து Huawei உற்பத்திகளின் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவு விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகளையும் வாடிக்கையாளர்கள் இச்சேவை மையங்கள் மூலமாகப் பெற்றுப் பயனடைய முடியும். 

தனது விசுவாசம்மிக்க வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவையை தரமான அளவில் வழங்குவதை உறுதிசெய்யும் இலக்குடன், நாடெங்கிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 380 இற்கும் மேற்பட்ட சேகரிப்பு மையங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவையின் தேவையைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் தமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் tablet சாதனங்களை கொண்டு போய் ஒப்படைத்து, சேவையின் பின்னர் மீண்டும் பெற்றுக்கொள்ள வசதியாக மிகவும் சௌகரியமான இடங்களில் இந்த சேகரிப்பு மையங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக Huawei இன் பிரதான சேவை மையங்களுக்கு நேரடியாக பிரயாணம் செய்ய முடியாதவர்களுக்கு இவை மிகவும் உபயோகமாக உள்ளன. 

சேவை மையங்கள் மற்றும் சேகரிப்பு மையங்களின் விஸ்தரிப்பு நடவடிக்கை தொடர்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட Huawei Device Sri Lanka இன் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள், ´Huawei நிறுவனமானது வெறுமனே விற்பனை மீது மட்டும் கவனம் செலுத்தாது, எமது வாடிக்கையாளர்களின் நலன்களையும் கருத்தில் எடுத்து, விற்பனைக்குப் பின்னரான தரமான சேவை மற்றும் எத்தகவலையும் நாம் அனைவரும் இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. 

இத்தகைய வழிகளில் அடையப்பெறும் பொறிமுறையின் ஊடாக விசுவாசம் கொண்ட எமது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற எமக்கு அது இடமளிக்கின்றது. இலங்கையில் அனைத்து பாகங்களிலும் உள்ள Huawei வாடிக்காளர்கள் அவர்கள் எங்கிருந்தாலும் சிரமங்களின்றிய சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும், தமது தேவைகளை விரைவாக நிறைவேற்றிக்கொள்ளவும் உறுதி செய்யும் வழிமுறைகளை நாம் தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றோம்,´ என்று குறிப்பிட்டார். 

Huawei Sri Lanka இன் சேவை மையத்தை 0112423017 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடிவதுடன், இது வார நாட்களில் மு.ப 9 மணி முதல் பி.ப 6 மணி வரையும், சனிக்கிழமைகளில் மு.ப 9 மணி முதல் பி.ப 1 மணி வரையும் திறந்திருக்கும். எந்தவொரு சேவை மையங்களுக்கும் வாடிக்கையாளரால் பிரயாணம் செய்ய முடியாத நிலைமை காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அருகாமையிலுள்ள சேகரிப்பு மையம் எதுவென்பதை அவர்கள் இனங்கண்டு கொள்வதற்கு இந்த வாடிக்கையாளர் சேவை அழைப்பு இலக்கம் அவர்களுக்கு உதவும். 

Huawei இன் சந்தைப்படுத்தல் மற்றும் விஸ்தரிப்பு மூலோபாயத்திற்கு அமைவாக, வாடிக்கையாளருக்கு மிகவும் அருகாமையிலுள்ள தொடர்பு மையத்தின் மூலமாக அவர்கள் நிறுவனத்தை இலகுவாக எட்டும் வகையில் பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்க இடமளிப்பதற்காக தனது சேவை மையங்களை ர்ரயறநi தீவிரமாக விஸ்தரிப்புச் செய்து வருகின்றது. 

2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமீபத்தைய Fortune 500 முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்தில் Huawei நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes அண்மையில் வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தக நாமங்களின் பட்டியலில் 88 ஆவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. 

BrandZ வெளியிட்டுள்ள முதல் 100 ஸ்தானங்களிலுள்ள பெறுமதிமிக்க சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 49 ஆவது ஸ்தானத்தில் உள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள 2018 ஆம் ஆண்டிற்கான Brand Finance Global 500 மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியலில் 25 ஆவது ஸ்தானத்திற்கு Huawei முன்னேற்றம் கண்டுள்ளது. 

Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 70 ஆவது ஸ்தானத்தில் Huawei உள்ளது. இலங்கையில் முதல் ஸ்தானத்திலுள்ள தரமான ஸ்மார்ட்போனாக Huawei தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், தனது புத்தாக்கம் மற்றும் ஈடுஇணையற்ற தரம் மீதான அதன் அர்ப்பணிப்பினூடாக கடந்த காலங்களில் மேற்குறிப்பிட்ட ஸ்தானத்தை அது நிரூபித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு