கிளிநொச்சியில் 300 குடும்பங்களுடன் ஒரு பகுதி முடக்கப்பட்டது! 4வயது, 6 வயது சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று..
கிளிநொச்சி - வட்டக்கச்சி கட்சன் வீதியில் கடந்த 5 நாட்களில் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்படி பகுதி நேற்று இரவு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது.
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - கட்சன் வீதியில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தொிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 5 நாட்களில் 4 மற்றும் 6 வயதான சிறுவர் உட்பட 16 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். மேற்படி 16 போில் 11 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
3 பேர் நேற்றுமுன்தினமும், அதற்கு முன் முன்று தினங்கள் தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் குறித்த பகுதி நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாள 300 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் முடக்கப்பட்டுள்ளனர். குறித்த முழுமையான முடக்கம் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும், வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும்
சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இதேவேளை 9 முக்கிய இடங்களில் இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.