SuperTopAds

சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதை தவிரவேறு வழியில்லை

ஆசிரியர் - Admin
சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதை தவிரவேறு வழியில்லை

அந்நிய செலாவணி நெருக்கடியை தவிர்ப்பதற்கு சிறிலங்கா சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவதை தவிர வேறு வழியில்லை என சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் வங்கிக்கடன்கள் செலுத்தப்பட்ட பின்னர் இது ஒரு பில்லியன் டொலரால் குறைவடையும் என தெரிவித்துள்ளார்.

கையிருப்பில் 3 பில்லியன் டொலர்களே காணப்படும் ஆனால் 4.3பில்லியன் டொலர் கடன்களை செலுத்தவேண்டியுள்ளது என ரணில் தெரிவித்துள்ளார்.

போதிய டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக இறக்குமதிகளை கட்டுப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் அபிவிருத்தியடைந்த நாடுகளிற்கு உதவமுன்வந்துள்ளது என தெரிவித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் சர்வதேச நாணயநிதியத்திடம் நிதியை பெறுவதற்காக இலங்கை உரிய திட்டத்தினை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.