இந்திய வீரர் ரிஷப் பண்ட் உட்பட இருவருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
இந்திய வீரர் ரிஷப் பண்ட் உட்பட இருவருக்கு கொரோனா!!

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் குணமடைந்துவிட்டார். ஒருவருக்கு இன்னும் தொற்று பாதிப்பு உள்ளது என்ற செய்தி வெளியானது. தற்போது இரண்டு பேரில் ஒருவர் ரிஷப் பண்ட் என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் ரிஷப் பண்ட் இன்று துர்ஹாம் செல்லும் அணியுடன் செல்லமாட்டார். அவர் தங்கி இருக்கும் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.


Radio