கிறிஸ் கெய்ல் தாண்டவம்!! -மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி-

ஆசிரியர் - Editor II
கிறிஸ் கெய்ல் தாண்டவம்!! -மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி-

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே இடம்பெற்ற 3 ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 33 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த வெற்றி இலக்கை தொட்டது. 

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக 67 ஓட்டங்களை பெற்று கொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டார்.


Radio