காதலில் தோல்வி!! -மனம் திறக்கும் அனுபமா பரமேஸ்வரன்-
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என வேவ்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், காதல் தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் அவர் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதன் போது ரசிகர் ஒருவர், நிஜ வாழ்க்கையில் நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து அவர் “நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன். ஆனால் அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்கவில்லை. அது தோல்வி அடைந்து விட்டது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை’’ என்றார்.