எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ரணில் ஆலோசனை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்கால அரசியல் பயணம் குறித்து இதன்போது அவர் கலந்துரையாடினார் என்று ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.