SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவேன்...

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவேன்...

இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாக அடுத்துவரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் விசேட தீர்மானம் ஒன்றை கொண்டுவ வருவேன் என தமிழக நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். 

ஈழ தமிழ் பிள்ளைகளுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை கட்டவுள்ள கருணாஸ் அந்தகட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டவருமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு வி டுப்பதற்கா யாழ்ப்பாணம் வந்திருந்தார். 

யாழ்ப்பாணத்தில் முதலமைச்சருடனான சந்திப்பை நிறைவு செய்து கொண்டு கிளிநொச்சி சென் ற கருணாஸ் கிளிநொச்சியில் 413 நாட்களாக போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசினார். 

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கருணாஸ் மேற்கண்டவாறு கூறி யுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக அறவழியில் போராடுகின்றனர்.

அவர்களை நேரில் பார்த்து அவர்களுடன் பேசியதன் ஊடாக அவர்களுடைய உணர்வுகளை நான் நன்றாக புர்pந்து கொண்டிருக்கிறேன். தமிழகம் திரும்பியதும் தமிழக முதலமைச்சர் மற்று ம் சபாநாயகர் ஆகியோரிடம் இந்த விடயத்தை கூறுவேன்.

அதனடிப்படையில் அடுத்துவரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இராணுவத்திடம் ஒப்படை க்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசேட தீர்மானம் ஒன்றை கொண்டுவரு வேன். அந்த தீர்மானத்திற்கு தோழமை கட்சிகளின் ஆதரவும் கோரப்படும்.

மேலும் நிறைவேற்றப்படும் சட்டமன்ற தீர்மானத்தை இந்திய மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கு ம் அனுப்பிவைப்பேன். கடந்த மாதம் ஜெனீவா சென்று அங்கு ஈழ தமிழர்களை பற்றி பேச மு யற்சித்தேன். ஆனாலும் எனது பயணம் தடைப்படுத்தப்பட்டது. 

இது எங்களுடைய பிரச்சினை இதற்கான தீர்வை மற்றவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்க இயலாது. ஆகவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னாலான உதவிகளை நிச்சயமாக செய்வேன் என்றார்.