வாட்ஸ்ஆப்பில் LOCKED RECORDINGS அம்சம் இணைப்பு

ஆசிரியர் - Admin
வாட்ஸ்ஆப்பில் LOCKED RECORDINGS அம்சம் இணைப்பு

வாட்ஸ்ஆப்பில் லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான 2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஒலிப்பதிவு தகவல்களை அனுப்ப முடியும்.

வழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு ஒலிப்பதிவு தகவலை மட்டுமெ அனுப்ப முடியும். ஒலிப்பதி பொத்தானை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்த பின்னர் பொத்தானை விடவேண்டும் இனிமேல் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப ஒலிப்பதிவு பொத்தானை ஒருமுறை அழுத்தி தகவலை ஒலிப்பதிவு செய்யலாம். ஒலிப்பதிவு செய்து முடித்த பின்னர் மறுபடியும் ஒருமுறை அழுத்தினால் போதும்.

வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஒலிப்பதிவு தகவல் அம்சமானது தற்போது வரையிலாக சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. எப்போது நிலையான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது பற்றிய விரவரங்கள் ஏதும் இல்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு