யாரை நம்புவது என்றே புரியவில்லை!! -குமுறும் ஐஸ்வர்யா ராஜேஸ்-
முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஸ் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் தனக்கு எதிராக செயல்பட்டது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைப்பற்றிய தனிப்பட்ட விவரங்களை கூறும் செயலில் எனக்கு மிகவும் நம்பிக்கையான நபரே செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு பலர் கூறினார்கள். இருப்பினும் நான் அவ்வாறு செய்யவில்லை. இனிமேல் அவதானமாக இருப்போம் என்று விட்டுவிட்டேன் என்றார்.