SuperTopAds

மக்களே இல்லாத ஊரில் 16 கோடி செலவில் புனரமைக்கப்படும் வீதி! பொறுப்புவாய்ந்த எவருக்கும் எதுவும் தொியாதாம், நம்புவோம்..

ஆசிரியர் - Editor I
மக்களே இல்லாத ஊரில் 16 கோடி செலவில் புனரமைக்கப்படும் வீதி! பொறுப்புவாய்ந்த எவருக்கும் எதுவும் தொியாதாம், நம்புவோம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களே இல்லாத பகுதியில் அமைக்கப்படும் 2 கிலோ மீற்றர் வீதிக்கு 16 கோடி ரூபா மக்களின் வரிப் பணம் வீனடிக்கப்படுவதாக பகிரங்கமாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டப்படுகின்றது. 

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் தம்பிராய் - கறுக்காய்தீவு வீதியில் செல்லையாதீவு பாடசாலை தாண்டி செல்லும் சமயம் வலது புறமாக திரும்பும் பாதையே செல்லையாதீவு அம்மன் கோவிலடிவரை 

2.250 கிலோ மீற்றர் நீள வீதி தற்போது (160 மில்லியன்) 2 கோடி ரூபா செலவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்படுகின்றது.இருந்தபோதிலும் இந்த கிராமத்தில் தற்போது அமைக்கும் வீதிக்கு அண்மையாக 

கொல்லகுறிச்சி, செட்டியார் குறிச்சிப் பகுதிகளில் ஏற்கனவே பாவனையில் உள்ள அம்மன் கோவிலிற்கு செல்லும் 3 கிலோ மீற்றர் வீதி ஒன்று பழுதடைந்த நிலமைநில் உள்ளது. இந்த வீதியில் 75ற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்றதோடு 

350ற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நாளாந்த பாவனை வீதியாகவும் உள்ளது. தற்போது அமைக்கும் வீதியை கொல்லகுறிச்சி கமக்கார அமைப்பும் அம்மன் ஆலயம் ஆகியன விடுத்த கோரிக்கையின் பெயரில் தற்போது அமைக்கப்படுகின்றது. 

இந்த வீதி அமைப்புத் தொடர்பில் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கூறப்படும் வரையில் பிரதேச செயலகத்திற்கு இந்த வீதி அமைப்பு தொடரில் ஏதுவுமே தெரியாது.

இந்த வீதி கிறவல் வீதியா அல்லது தார் வீதியா போன்ற விபரங்களோ அல்லது இதற்கான முன்மொழிவுகளோ எமக்கு எதுவுமே தெரியாது என பிரதேச செயலகம் கையை விரிக்கின்றது. 

இந்த வீதியின் உரித்தாளரான பூநகரி பிரதேச சபையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த வீதியினை புனரமைப்புச் செய்ய நாம் கோரிக்கை விடவில்லை, இந்த வீதியை செப்பனிட அனுமதியோ 

அல்லது இந்த வீதியை புனரமைப்பிற்காக கையளிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடவும் இல்லை. இத்தனைக்கும் அப்பால் அங்கே வந்து கிறவல் பறித்து பணிகளை ஆரம்பிக்கும் வரையிலும் 

எமக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் எமது பகுதியில் வரும் அபிவிருத்திப் பணி ஒன்றிற்கு நாம் தடையாக இருக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே பொறுமை காக்கின்றோம் என்கின்றனர்.

இவை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் இளங்கீரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , இந்த வீதிக்கான நீளம், பெறுமதியை உறுதி செய்த போதிலும் வீதி தேர்வு , 

சிபார்சு தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது. உள்ளூர் அமைக்களின் கோரிக்கையின் பெயரிலேயே தலமைப் பணிமனையினால் தேர்வு செய்யப்பட்டது என்கின்றார்.இவை அனைத்து விடயம் சார்பிலும் மாவட்ட அரச அதிபரும் 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திருமதி.ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,உண்மையில் நாம் வினாவும் வரையில் மாவட்ட அரச அதிபர்கூட 

இது தொடர்பில் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அதேநேரம் இது ஐ றோட்டாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ஐ றோட் திட்டம் மக்களின் கருத்தறியாது இடம்பெறாது. ஆனால் மக்களே இல்லாத வீதிக்கு 16 கோடி ரூபா 

என்பதனை அறிந்திருக்கவில்லை. அதனால் உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு மாற்று வழி தொடர்பில் ஆராயப்படும் என்றார். நாட்டில் இடம்பெறும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதியின் கீழ் 

இடம்பெறும் இப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் ஓர் பொறியியலாளருக்கு இப் பகுதியில் 10 ஏக்கர் நிலம் இருப்பது மட்டுமே இவ் வீதி தேர்வு செய்யப்பட்டதற்கு அடிப்படை காரணம் என சந்தேகிக்கப்படுவதோடு 

திட்டம் ஆரம்பித்து பணிகள் இடம்பெறுகின்றபோதும் அந்த இடத்தில் ஓர் விளம்பரப் பலகைகூட இல்லாதமை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மாவட்டத்திலேயே இந்த ஒரு வீதிதான் ஒரு லட்சம் வீதி திட்டத்தில் தற்போதுவரை போடப்படுகின்றது. 

இவை அனைத்திற்கும் மேலாக 16 கோடி ரூபாவில் அமைக்கப்படும் வீதியில் அதிக சதுப்பு நிலப் பிரதேசம் உள்ளது. அந்த சதுப்பு களிகூட அகற்றப்படாமலேயே கல் அடுக்கப்படுவதனால் கனரக வாகனம் சென்றால் 

நிச்சயமாக வீதி கீழ் இறங்கும் நிலமையே ஏற்படும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவைச் சேர்ந்த ஜீவநாயகம் குற்றம் சாட்டுகின்றார்.இவை அனைத்தும் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 

வடக்கு மாகாண பிரதம நிறைவேற்று அதிகாரி குறூஸ்சை தொடர்பு கொண்டு கேட்டபோது, கண்ணகை அம்மன் வீதியானது ஆலயத்தின் பெயரிலும் விவசாயிகளின் நன்மை கருதியும் இந்த வீதியும் பரிந்துரைக்கப்பட்ட வீதியாகும். 

இருப்பினும் அதிக மக்கள் வாழும் வீதி தவற விடப்படுகின்றதானால் தற்போதும் ஒரு லட்சம் வீதி திட்டத்தில் மேலும் வீதிகள் உள்ளமையினால் அந்த வீதியினையும் இணைப்பதற்கு முன் உரிமை அளிக்க முடியும். 

இந்த ஒரு லட்சம் வீதியில் நாடு முழுவதும் விவசாயிகளிற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. எனப் பதிலளித்தார்.