SuperTopAds

திருமணத்திற்கு பின்னும் நடக்க வரும் சுவாதி!!

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு பின்னும் நடக்க வரும் சுவாதி!!

தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி 2018 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இதன் பின் சினிமாவை விட்டு அவர் விலகினார். கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பிய அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. 

இந்தநிலையில் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. படப்பிடிப்பில் அவர் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.