தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 24 வயது இளைஞன் கைது!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான
பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ்
குற்றமாக கருதப்படுவதாகவும் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்
இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போது 24 வயது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும்
குறித்த இளைஞர் போர் முடிந்த போது 12 வயதுச் சிறுவனாக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.