கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் – இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

ஆசிரியர் - Admin
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் – இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து  செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்தியாவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது அவசர உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாடடலில் எக்ஸ பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதப்புக்கள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எமது அவசர கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் உடனடியாக உதவுகின்ற இந்தியா கப்பல் விபத்தின் போதும், விரைந்து வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தன.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, ஏற்பட்ட பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு பேருதவியாக அமைந்திருந்தது.

எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில் நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கிறனறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை இந்திய அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு நாடுகளும் அவசர தேவைகளில் மாத்திரமன்றி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியிலும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு