SuperTopAds

யாழ்.அரியாலையில் 4 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணை! சீனர்களும் தங்கியுள்ளனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலையில் 4 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணை! சீனர்களும் தங்கியுள்ளனர்..

கௌதாரிமுனை கடல் அட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சீனர்கள் சுமார் 4 வருடங்களாக அரியலை கடல் அட்டை இனப்பெருக்க நிலையத்தில் தங்கியிருக்கின்றமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரியாலை பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் குத்தகை அடிப்படையில் குறித்த கடலட்டை இனப்பெருக்கப் பண்ணையை 

சீனர்களின் உதவியுடன் உற்பத்திப் பணிகள் இடம்பெற்று வருகிறது. குறித்த பண்ணைக்கான அனுமதியை தேசிய நீர்வாழ்வு உயிரின மேம்பாட்டு அதிகாரசபையே வழங்கியுள்ளதாக அறியக் கிடைக்கும் நிலையில்

குறித்த பகுதியில் கடல் அட்டை இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அரியாலைப் பகுதியில் தங்கி நிற்கும் சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்தார்களா? 

அல்லது தொழில் விசா நிமிர்த்தம் யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கிறார்களா? என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் இனப்பெருக்கம் செய்யப்படும் கடல் அட்டைகளை வளர்ப்பதற்காக 

கௌதாரிமுனை கடற்பரப்பில் சீன நாட்டவர்கள் முகாமிட்டதால் சர்ச்சைகள் ஏற்பட்டது. அரியாலையில் அமைந்துள்ள கடல் அட்டை இனப்பெருக்க பண்ணையின் உரிமம் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு சொந்தமானதாக 

அறியப்படும் நிலையில் 2011 ஆம் ஆண்டின் மீன்வளர்ப்பு ஒழுங்கு முறையின் கீழ் ஒவ்வொரு வருடமும் அனுமதி புதுப்பிக்கபடுவதாக அறியக் கிடைத்துள்ளது.