வடமாகாணம் ஊடாக பேரழிவை உண்டாக்ககூடிய “டெல்ட்டா” திரிபு வைரஸ் நாட்டுக்கள் பரவும் அபாயம்! கொரோனா கட்டுப்பாட்டு அமைச்சு எச்சரிக்கை..
மனிதனை மூச்சு திணறவைத்து கொல்லும் டெல்டா வகை திரிபு வைரஸ் விமான நிலையங்கள் ஊடாக மட்டுமல்லாமல் வடபகுதி ஊடாக இந்திய மீனவர்களாலும் நாட்டுக்குள் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் கொரோனா தடுப்புக்கான அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, வடக்கு கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இந்தியாவில் திரிபடைந்த டெல்ட்டா வைரஸ் இலங்கை உட்பட 85 நாடுகளுக்கு இன்று பரவியிருக்கும் நிலையில் குறித்த வைரஸ் தொற்றை நாம்
ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியாகவேண்டும். இல்லையேல் நாடு முழுவதும் துரிதமாக பரவி பேராபத்தை உண்டாக்ககூடிய சந்தர்ப்பம் உள்ளது. அவ்வாறான நிலை ஏற்படுமானால் நாளாந்தம் நுாற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் எங்கள் நாட்டில் பதிவாகும் சந்தர்ப்பங்கள் உள்ளது.
அதற்கு இந்தியாவில் நடந்த சம்பவங்கள் சிறந்த உதாரணங்களாக அமையும் எனவே மக்கள் டெல்ட்டா திரிபு வைரஸ் தொடர்பாக அலட்சியமாக இருக்க முடியாது. இந்நிலையில் வடபகுதியில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அவர்களிடமிருந்து வடபகுதி ஊடாக டெல்ட்டா வைரஸ் பரவும் அபாயம்
தற்போது எழுந்திருக்கின்றது. அதனடிப்படையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கள் குறைக்கப்படவேண்டும் என்பதுடன், எமது மீனவர்களும் தங்கள் பொறுப்பை உணரவேண்டும் என எச்சரித்துள்ளார்.