மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்தவர் மீது மோதிய கப் வாகனம்..! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலி, கப் வாகனம் தப்பி ஓட்டம்..
கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிரக்கின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது எதிரே பயணித்த கப் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
விபத்தில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய அருளானந்தம் மைக்கல் எனும் குடும்பத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவி்கின்றனர்.
செல்வாநகர் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை எதிரே வந்த வாகனம் வீதி விதிகளை பின்பற்றாது பயணித்து மோதியுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை கைவிட்டு குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி வீதிக்கு வெளியே வாகனத்தை செலுத்தி
வாகனத்துடன் தப்பி சென்றுள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிசார் பொதுமக்கள் வழங்கிய தகவல்கள்
மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றம் சாரதி தொடர்பில் துரித விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சாரதிமீது போக்குவரத்து விதி கோவை சட்டத்தின் பிரகாரம் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நபரை வைத்திய சாலைக்கு அழைத்து செல்லாது தப்பி சென்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.