தமிழ் அரசியல்வாதிகளின் உறக்கம்! ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தது யாழ்.தேர்தல் மாவட்டம், 17 ஆயிரம் வாக்காளர்களுக்கு தொடர்பு இல்லையாம்..
17ஆயிரத்து 579 வாக்காளர்களை தொடர்புகொள்ள முடியாததன் காரணமாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனம் குறைவதற்கு காரணமாக இருந்துள்ளது. என யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் மூலம் அறியக் கிடைத்தது.
2019 ஆண்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5இலட்சத்து 71ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதுடன் யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேரும் கிளிநொச்சியில் 92 ஆயிரத்து 264 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
பின்னர் இடம்பெற்ற வாக்காளர் மீளாய்வுப்படுத்தலினால் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 63 ஆயிரத்து 193 பேர் வாக்காளராக உறுதிப் படுத்தப்பட்டனர். இதன் காரணமாக யாழ்பாணத்தில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 823 பேரும்
கிளிநொச்சி மாவட்டத்தில் 93 ஆயிரத்து 371 பேரும் வாக்காளராக உறுதிப்படுத்தப்பட்டனர். 2020வாக்காளர் இடாப்பு மீளாய்வு செய்யப்பட்ட நிலையில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுமார் 17 ஆயிரம் வாக்காளர்கள் குறைந்த நிலை காணப்பட்டது.
தற்போது ஆய்வு செய்யப்பட்டதில் யாழ்ப்பாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட 4 லட்சத்து 69 ஆயிரத்து 823 வாக்காளர்களில் 18 வயதைத் தாண்டிய புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். வலி வடக்கில் உள்ள 21 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து
சுமார் 20 ஆயிரத்து 567 வாக்காளர்கள் தமது பதிவை உறுதிப்படுத்தப்படாத நிலையில் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களம் எடுத்த முயற்சியின் காரணமாக 1 308 பேர் வாக்காளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
வலி வடக்கில் உறுதி செய்யப்படாதிருந்த 20 ஆயிரத்து 567 வாக்காளர்களில்களில் வெளிநாடு சென்றோர் 940, மரணம் அடைந்தோர் 1252, இரு இடங்களிலும் பதிவுகளை மேற்கொண்டார் 488 என தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலை ஒன்றில் காரணமாக யாழ் தேர்தல் மாவட்டத்தின் 7ஆக காணப்பட்ட ஆசனம் 6 ஆக குறைவடைந்தது. எனினும் உறுதிப்படுத்தாத எஞ்சியுள்ள 17,579 வாக்காளர்களை இனிவரும் காலங்களில் அடையாளப்படுத்த முயன்றாலோ
அல்லது இரட்டை பிரஜாவுரிமை பெற்று வெளிநாடுகளில் இருப்பவர்களை வாக்காளர்களாக இணைப்பதன் மூலம் எதிர் காலத்தில் ஆசன அதிகரிப்புக்கு வாய்ப்புள்ளது.