நள்ளிரவு தாண்டியும் நீடித்த பதற்றம்! அமைச்சர் வியாழேந்திரனின் உருவப்படங்களை எரித்தும் மக்கள் போராட்டம்..
அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து வியாழேந்திரனின் வீட்டு சுற்றாடலில் பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது.
நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நடத்திய துப்பாக்கி சூட்டில் டிப்பர் வாகன சாரதி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டதுடன் இருவருக்கிடையிலான தர்க்கமே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என பொலிஸார் முதற்கட்ட தகவலை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் மக்கள் கூடி இரவிரவாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது , வியாழேந்திரனின் உருவ படங்களை எரித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.