இளையதளபதியின் 65 ஆவது படத்தின் பெயர் பீஸ்ட்!! -பெர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியீடு-

ஆசிரியர் - Editor II
இளையதளபதியின் 65 ஆவது படத்தின் பெயர் பீஸ்ட்!! -பெர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியீடு-

நாளை தனது 47 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இளையதளபதி விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே  நடித்து வருகிறார். இந்த நிலையில், இளையதளபதியின் 65 ஆவது படத்திற்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. நாளை இளையதளபதி விஜய் தனது 47 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு