யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை தளர்வை தொடர்ந்து நகர பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தாராளம்! பொலிஸ், இராணுவம் தீவிர கண்காணிப்பில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை தளர்வை தொடர்ந்து நகர பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தாராளம்! பொலிஸ், இராணுவம் தீவிர கண்காணிப்பில்..

நாடு முழுவதும் இன்று அதிகாலை பயணத்தடை தளர்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதிகளவில் நடமாடி வருகின்றனர். 

இந்நிலையில் தேவையற்ற வகையில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடை பிடிப்பதற்காகவும் பொலிசாரும் இராணுவத்தினரும் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேபோல் வடக்கின் இதர மாவட்டங்களான கிளிநொச்சி ,மன்னார், முல்லைத்தீவு ,வவுனியா மாவட்டங்களிலும் மக்கள் பொது இடங்களிலும் சந்தைகளிலும் கடைத் தெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதி வருகின்றனர்.

ங்கிகள் , மதுபான நிலையங்கள்,சந்தைகள் என மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுகின்றன.


Radio