கொழும்பில் உலவிவரும் சீன மொழி பத்திரிகை! உணவகம் ஒன்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சிகள்..
சீனமொழி பத்திரிகைகள் ஒரு தொகுதி கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றில் இருந்தமை சமூகவலைத்தளங்களில் காட்சிகளாக பதிவாகியுள்ளது.
குறித்த பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான விவரங்கள் மற்றும் சீன தொடர்பான விவரங்கள் உள்ளடக்கியதான பதிப்புக்கள் வெளிவந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் அனேகமான பகுதிகளை சீனா குத்தகைக்கு பொறுப்பேற்ற நிலையில் கொழும்பு துறைமுக நகர் சீனக் கொலனியாக மாறிவிட்டதாக
அரசியல் அரங்கில் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பிரதேசங்களில் இடம்பெறும் கட்டுமானங்களுக்காக அதிகமான சீனர்கள்
பல வருடங்களாக தங்கியிருந்து இலங்கையில் வேலை செய்கின்றமையும் யாவரும் அறிந்ததே.இந் நிலையில் சீன மொழி பத்திரிகைகள் ஒரு தொகுதி
இலங்கை உணவகம் ஒன்றில் இருந்தமை இலங்கையில் உள்ள தமது சீனர்கள் வாசிப்பதற்கு விமானம் மூலம் அனுப்பப்படுகிறதா?
அல்லது இலங்கையிலே தமதுகட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் வைத்து அச்சுப்பதிப்பு செய்யப்படுகிறதா?