SuperTopAds

திருமணம், நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு தொடரும் தடை! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

ஆசிரியர் - Editor I
திருமணம், நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு தொடரும் தடை! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படவுள்ள நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல் நடைமுறையில் இருக்கும். என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கூறியுள்ளார். 

புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. 

புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒரு டக்ஸி உள்பட வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

வீட்டிலிருந்து இருவர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேற முடியும்.

திருமண வைபவங்கள், விழாக்கள், விருந்துகள் நடத்துவதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

மேல் மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மாத்திரமே சேவையில் ஈடுபட முடியும்.

களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கவேண்டும்.

பல்பொருள் அங்காடிகளில் இட அளவில் 25 சதவீதமான வாடிக்கையாளர்களையே அனுமதிக்க முடியும்.

வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்க நடை அடகுச் சேவைகளுக்கு அனுமதி.

மேல் மாகாணத்தில் கூட்டங்கள் நடத்தத் தடை.

ஆலயங்களில் பக்தர்கள் திரண்டு வழிபாடுகளில் ஈடுபடத் தடை.