SuperTopAds

மகன் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த தாய் அதிர்ச்சியில் மரணம்!

ஆசிரியர் - Editor I
மகன் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த தாய் அதிர்ச்சியில் மரணம்!

மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த சில மணிநேரத்தில் தாய் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கின்றார். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய 

ஞானப்பிரகாசம் மைக்கல் என்பரும் அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிகாசம் பாக்கியம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர் புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழந்து வருவதாகவும் இரண்டு தினங்களுக்கு முன்னர் 

மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஏறாவூர் ஜயங்கேணியிலுள்ள அவரது தாயார் தனிமையில் வாழ்ந்து வரும் வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் மகனை காணவில்லை என தாயார் தேடிய நிலையில் அறைக்கதவு பூட்டப்பட்டுள்ளதையடுத்து 

உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உடசென்றபோது அங்;கு கூரையில்; கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை கண்டுள்ளார்.

இதனையடுத்து புற்றுறோயினால் பாதிக்பட்டிருந்த அவரது தாயருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்தையடுத்து அவரும் உயிரிழந்துள்ளார். 

என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதில் உயிரிழந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்