யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 24 கிராமசேவகர் பிரிவுகள் சமூக முடக்கலில்! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 24 கிராமசேவகர் பிரிவுகள் சமூக முடக்கலில்! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாடு முழுவதும் பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படும் நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் 12 மாவட்டங்களில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் சமூக முடக்கலில் இருக்கும். என தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

கொரோனாப் பரவல் தீவிரத்தினைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொரோனா ஒழிப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில், கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, ரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே சமூக முடக்கல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவற்றில்,யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாவக்கட்டு,மட்டக்களப்பில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏறாவூர் 02,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை கிழக்கு, 

மீராவோடை மேற்கு, மாஞ்சோலை,அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலதப்பிட்டிய உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளே முடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு