யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா ஆபத்து! மாவட்டத்தில் 64 பேருக்கும், மாகாணத்தில் 96 பேருக்கும் தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா ஆபத்து! மாவட்டத்தில் 64 பேருக்கும், மாகாணத்தில் 96 பேருக்கும் தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

தன்படி யாழ்.மாவட்டத்தில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேருக்கும், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதேபோல் மன்னார் மாவட்டத்தில் 8 பேருக்கும், 

வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேருக்குமாக வடக்கில் 96 பேருக்கு தொற்று உறுதியானது.

Radio