யூட்யூப் விடீயோக்களை டவுன்லோட் செய்ய புதிய வழி இனி டேட்டா வேஸ்ட் ஆகாது

ஆசிரியர் - Admin
யூட்யூப் விடீயோக்களை டவுன்லோட் செய்ய புதிய வழி இனி டேட்டா வேஸ்ட் ஆகாது

என்னதான் யூட்யூப்பில் அனுதினமும் வீடியோ பார்த்தாலும் கூட, பார்க்கும் வீடியோவை, சேமிக்க (Save) செய்து வைத்துக்கொள்ளும் வசதி இல்லை கிடையாது என்பதை நம்மில் பெரும்பாலானோர்கள் அறிவோம்.

யூட்யூப் - சந்தேகத்திற்கு இடமின்றி வீடியோ நுகர்வுக்காகப் பயன்படுத்தும் ஒரு பொதுவான மற்றும் மிகப்பெரிய தளமாக உள்ளது. அதுவும் ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர், யூட்யூப்பை சார்ந்த இந்திய நுகர்வோர்களின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியது. சுமார் 80% இந்தியர்கள் யூட்யூப் தளத்தை அணுகவதாக, சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

என்னதான் யூட்யூப்பில் அனுதினமும் வீடியோ பார்த்தாலும் கூட, பார்க்கும் வீடியோவை, சேமிக்க (Save) செய்து வைத்துக்கொள்ளும் வசதி இல்லை கிடையாது என்பதை நம்மில் பெரும்பாலானோர்கள் அறிவோம். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே யூட்யூப் வீடியோக்களை சேமித்து வைக்கும் தந்திரம் தெரியும். அது எப்படி.?

ஒரு யூட்யூப் வீடியோவை சேமிக்க (Save) கீழ் தொகுக்கப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகள் பின்பற்றவும்.!

வழிமுறை #01

நீங்கள் சேமிக்க விரும்பும் யூட்யூப் வீடியோவிற்குச் செல்லவும், பிளே செய்ய கூடாது. வெறுமனே யூட்யூப் மொபைல் ஆப் வழியாக அணுக வேண்டும்.

வழிமுறை #02

வீடியோவின் வலது பக்கத்தின் கீழ், உள்ள மூன்று மூன்று புள்ளிகளை டாப் செய்யவும். பின்னர் அதில் காட்சிப்படும் இரண்டாவது விருப்பமான டவுன்லோட் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #3

இப்போது டவுன்லோட் செய்ய கேட்கும் வீடியோவின் தரத்தை தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது லோ, மீடியம் மற்றும் எச்டி ஆகிய மொன்று விருப்பங்கள் கிடைக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்யவும்.

வழிமுறை #04

வீடியோ தரம் பற்றிய விருப்பங்களை கொண்ட பெட்டியில், 'ரிமெம்பர் மை செட்டிங்ஸ்' என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், உங்களின் அடுத்தடுத்த வீடியோ டவுன்லோட்களில், வீடியோ தரம் சார்ந்த விருப்பங்களை ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை #05

இப்போது ஓகே கொடுக்க, குறிப்பிட்ட வீடியோவானது டவுன்லோட் ஆகும். டவுன்லோட் முடிந்த பின்னர் யூட்யூப் ஆப்பின் வலது கீழ் மூலையில் 'லைப்ரரி' காட்சிப்படும். அதை கிளிக் செய்ய 'டவுன்லோட்ஸ்' போல்டர் அணுக கிடைக்கும். அதனுள் சேமிக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு கிடைக்கும்.

வீடியோவை டெலிட் செய்ய விரும்பினால்.?

ஒருவேளை நீங்கள் அந்த வீடியோவை டெலிட் செய்ய விரும்பினால், வீடியோவின் அருகாமையில் இருக்கும் மூன்று புள்ளிகளை டாப் செய்ய 'டெலிட் ஃப்ரம் டவுன்லோட்ஸ்' என்கிற விருப்பம் கிடைக்கும்.

29 நாட்களுக்கு தங்கும்.!

இம்முறையின் கீழ் சேமிக்கப்பட்ட விடீயோக்கள் ஆனது உங்கள் சாதனத்தில் மொத்தம் 29 நாட்களுக்கு தங்கும் என்பதும் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை 48 மணிநேரங்கள் வரை தொடர்ச்சியான காலத்திற்கு ஆஃப்லைனில் பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

48 மணிநேரங்களுக்குப் பிறகு.?

குறிப்பிட்டுள்ள 48 மணிநேரங்களுக்குப் பிறகு மொபைல் அல்லது வைஃபை நெட்வொர்க் உடன் நீங்கள் இணைந்தால் மட்டுமே டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோக்களை காண முடியும். யூட்யூப்பில் உள்ள எல்லா வீடியோக்களும், இதே போல் ஆஃப்லைனில் பார்ப்பதற்கு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.!

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு