கொரோனாவால் மற்றுமொரு நடிகரும் மரணம்!!

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் மற்றுமொரு நடிகரும் மரணம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சமன் மித்ரு, இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

குறைந்த செலவில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தொரட்டி படத்தின் மூலம் நாயகனகாக அறிமுகமானவர் சமன் மித்ரு. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 43 வயதான அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், மோக்சா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு