பயணத்தடை 28ம் திகதிவரை நீடிக்கலாம்..! ஜனாதிபதி தலமையில் ஆராய்வு, இன்று அல்லது நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்..
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 28ம் திகதிவரை நீடிக்கப்படலாம் எனவும் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம். எனவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
இதன்படி பயணத்தடையை எதிர்வரும் 28ம் திகதிவரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்
நாடளாவியரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினால் கொரோனா தொற்று பரவல் வீழ்ச்சியடைந்துள்ளதாக பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும், பயணக்கட்டுப்பாட்டினால் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்பதாலும், சுகாதார பிரிவினரின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும்
நடைமுறையில் உள்ள பயணத்தடையை 28ம் திகதிவரை நீடிப்பதற்கு தேசிய பாதுகாப்புச் சபையில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் முன்னெடுத்துச் செல்லப்படடும் நடவடிக்கைகளை
முறையாக முன்னெடுத்து செல்லும் வகையில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்லைன் ஊடாக மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்வதற்கும்
பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிலையங்களை தொடர்ந்தும் திறப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அதன்படி 21ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள பயணத்தடையை 28ம் திகதிவரை
நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில ஜனாதிபதி தலமையில் கூடும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் அமர்வுகளில் இறுதி முடிவை எடுக்கலாம்.
எனவும் இந்த முடிவு இன்று அல்லது நாளை வெளியாகும் எனவும் அந்த செய்திகள் தொிவிக்கின்றன.