நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்..

அடுத்த 2 தொடக்கம் 3 வாரங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். என கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியிருக்கின்றார்.  

அடுத்த சில வாரங்களில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.எனினும் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பி117 கொரோனா வைரஸிலிருந்தே மூன்றாவது அலை ஆரம்பமானது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் இதுவேகமாக பரவக்கூடியது இதனால் பல பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் ஒருவர் பாதிக்க்பபட்டு இரண்டு மூன்று வாரங்களின் பின்னரே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன அதிகமான உயிரிழப்புகள் இரண்டு மூன்று வாரங்களின் பின்னரே இடம்பெற்றுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எந்த சூழ்நிலையிலும் எந்த தருணத்திலும் மாற்றமடையலாம் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் பி117 கொரோனா வைரசிற்கு எதிராக மருந்துகள் பயன்அளிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

வைரசினை தற்போது கட்டுப்படுத்த தவறினால் எதிர்காலத்தில் மேலும் பல வைரஸ்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு