SuperTopAds

பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுல்! கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுல்! கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர்..

பயணத்தடை நீக்கப்பட்டாலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையும் வரையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது. எனவும் இறுக்கமான கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தற்போதைய போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின் பலாபலன் களை அனுபவிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதுவரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் குறைவடைவதற்கு இன்னமும் இரண்டு மூன்று வாரங்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மருத்துவதுறை சார்ந்தவர்களும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே அரசாங்கம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானித்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையைக் கருத்திலெடுத்த பின்னரே போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் 

குறைவடையும் வரை பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கப்படாது என சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.