SuperTopAds

மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்:

ஆசிரியர் - Admin
மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

சென்னையில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், இந்திய மத்திய அரசாங்கம் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெக்கவில்லை.

இதன் காரணமாக தமிழக அரசாங்கம் இதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

இதேவேளை, இந்தியாவில் தலித்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றவர்களால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்திய உயர்நீதிமன்றம் விடுத்த தீர்ப்பொன்று அவர்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமைக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் 8 பேர்வரையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.