அந்த பெண் எனது உறுப்பை துண்டிக்க முயன்றார்: - இளைஞனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் வீட்டிற்கு மொபைல் போன் டெலிவரி செய்வதற்கு சென்ற இளைஞரை, பெண் ஒருவர் 20 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த சம்பவம் குறித்து கேசவ் குமார் சிங் கூறியதாவது, வழக்கம்போல் பணிக்கு சென்றேன், ஆர்டர் செய்த மொபைல் போனை எடுத்து விட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். மொபைல் போனுக்கான 11 ஆயிரம் ரூபாயை என்னிடம் கொடுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் பொறுமையாக பதிலளித்தேன். முகவரியை கண்டுபிடிக்க தாமதமாகிவிட்டது என கூறினேன்.
கோபம் கொண்ட அப்பெண், திடீரென என்னை தாக்கினார், பிறகு எனது வலது மற்றும் இடது மணிக்கட்டை அறுத்தார். இதில் அவரது சகோதரரும் சேர்ந்து கொண்டு, அவரது ஷீவால் என்னை மிதித்தார். அந்தப்பெண் எனது அந்தரங்க உறுப்பை துண்டிக்க முயன்றபோது, அவரது சகோதரர் தடுத்ததால் என்னை விட்டார். பின்னர், அங்கிருந்து நான் தப்பித்து செல்ல முயன்றபோது, நாற்காலியை என்மீது போட்டு அதன் மேல் ஏறி அமர்ந்துகொண்டார்.
நான் உதவிக்கு அழைக்கும் சத்தம் வெளியே யாருக்கும் கேட்கக்கூடாது என்பதற்காக எனது வாயில் துணியை போட்டு அடைத்துவைத்தார்கள். 20 நிமிட சித்ரவதைக்கு பிறகு, என்னை ஒரு வேனில் ஏற்றி கழிவுநீர் குழாயில் வீசிச்சென்றனர், எனக்கு நடந்த இந்த கொடுமையை என்னால் மறக்க இயலாது என கூறியுள்ளார். சுமார், 45 தையல்கள் போடப்பட்டு தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த பணியில் இருக்கிறேன்.
வாடிக்கையாளர்கள் வெவ்வேறு குணம் கொண்டவர்கள், நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறேன். நான் குணமடைந்து பணிக்கு திரும்புவரை, எனக்கான ஊதியத்தை வழங்குவதாக எனது நிறுவனம் தெரிவித்துள்ளது என்றிகார் கேசவ். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அப்பெண்ணோ இப்படி ஒரு சம்பவத்தை நான் செய்யவில்லை என மறுத்துள்ளார்.