மீண்டும் குடும்ப விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார்..! வடக்கின் மற்றய மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமா?
முல்லைத்தீவு மாவட்டத்தில் குடும்ப விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருருக்கின்றனர்.
1865 ஆன் ஆண்டின் பொலிஸ் கட்டளைச் சட்டம் 76ஆவது பிரிவின் படி பொலிசாரினால் குடும்ப விபரங்கள் திரட்டப்படுகின்றது.
இப் பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் அங்குள்ள பொலிஸ் பிரிவில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பத்தவர்களோ அல்லது யாராவது வேறு இடத்தில் இருந்து வந்தாலோ அல்லது வெளியே சென்றாலோ
பொலிஸில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக் கிழமை முதல் இப்படிவம் விநியோகம் இடம்பெற்று பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் 155 வருடங்களிற்கு முந்தய சட்டங்களை பின்பற்றியே
இலங்கை பொலிஸ் திணைக்களம் செயலபடுகின்றதா என கேள்வி எழுப்பப்படுகின்றது. இதேநேரம் 1865ஆம் ஆண்டின் 76 ஆவது சட்டத்தை மீறினால்
உச்ச பட்சமாக 50 ரூபாவே குற்றப்பணம் விதிக்க முடியும் என்றே சட்டத்தில் கூறப்படுவமாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.