பயணத்தடை அமுலில் இருந்த நிலையில் சூதாட்டம்! 14 பேர், 4 லட்சத்தி 15 ஆயிரம் பணத்துடன் கைது..
பயணத்தடை அமுலில் இருந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டதுடன் 4 லட்சத்தி 15 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதேவேளை குறித்த நபர்களுக்கு எதிராக பயணக்கட்டுப்பாட்டினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிலும்
வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.