4 வயதான குழந்தைக்கு மதுபானம் அருந்த கொடுத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவருக்கு நடந்த கதி!

ஆசிரியர் - Editor I
4 வயதான குழந்தைக்கு மதுபானம் அருந்த கொடுத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவருக்கு நடந்த கதி!

4 வயதான குழந்தைக்கு மதுபானம் பருக கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹான தெரிவித்துள்ளதாவது, பெலியகோட புதிய சாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பெலியகொட பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதாவது 4 வயது குழந்தையை  பீர் போத்தலில் இருந்து பீர் குடிக்க அனுமதித்த குற்றச்சாட்டிற்காகவே 25 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Radio