மாஸ்க் அணியாமல் சென்றவரை கண்டித்ததற்காக பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
மாஸ்க் அணியாமல் சென்றவரை கண்டித்ததற்காக பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

முக கவசம் அணியாததை கண்டித்ததற்காக பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை பொது சுகாதார பரிசோதகர் எச்சரித்த போது, அதனை கவனத்திற் கொள்ளாத இளைஞன் பொது சுகாதார பரிசோதகரை தாக்கியதாக 

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Radio